பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே மட்டையாந்திடல் ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ கயிலாசநாதர் வருணபுர சிவாலய மஹா கும்பாபிஷேகம்….
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுக்கா மட்டையாந்திடல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ கயிலாசநாதர் வருணபுர சிவாலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது..
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட ஆறு காலம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன..
அதனை தொடர்ந்து மேள, தாளங்களுடன் , வேத மந்திரங்கள் முழங்க,
சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் கடத்தை சுமந்தவாறு திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று ஸ்ரீ கயிலாசநாதர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்று,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மட்டையாந்திடல் கிராமவாசிகள்,விழா குழுவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.