திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 50 கோடி மதிப்பீட்டில் 2000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வகையில் சிறு ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது தொழில் துறை அமைச்சர் டி .ஆர். பி .ராஜா ஜவுளி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ் எஸ். சி .எம் . கார்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை சில்க்ஸ் தொழில் உரிமையாளர் பரமசிவம் தொழில் துறை செயலர் அருண்ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மன்னார்குடி தொகுதிக்கு ஏறத்தாழ ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தந்ததன் அடிப்படையில் அதனை நிறைவேற்றி வருகிறோம்.
இதில் 2000 மகளிர்க்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஜவுளி பூங்கா எஸ் ஜி எஸ் சி எம் நிறுவனத்தின் மூலம் இங்கு கொண்டு வந்து இன்றைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதன் மூலம் ஆலங்கோட்டை மட்டுமல்லாமல் இதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மகளிர்கள் இதனால் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் பயன் பெற முடியும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் தலையாமங்கலம் பாலு, மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல் , மாவட்ட அவைத் தலைவர் தன்ராஜ் , நகராட்சி தலைவர் சோழராஜன், எஸ் சி எம் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் , மேலாளர் சுஜிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர், திட்ட மேலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்,