பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி விமன் இந்தியா
மூவ்மென்ட் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…..

பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவி நூருல் நஸ்ரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விமன் இந்தியா மூவ்மென்ட் மாநில செயலாளர் தஸ்லிமாஷரிஃப், மாவட்ட தலைவர் அப்துல் அஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ஜமாத் நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *