பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே உள்ளிக்கடையில் 73 -ஆம் ஆண்டு மாசி உற்சவ பால்குட திருவிழா….
திரளான பக்தர்கள் பால்குடம் ,காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளிக்கடை செங்குந்தர் தெரு கிராமவாசிகள் சார்பில் 73 -ஆம் ஆண்டு மாசி உற்சவ பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி ,அலகு காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் வீதியுலா வந்து மணலூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர் விழாவில் உள்ளிக்கடை செங்குந்தர் தெரு கிராம நாட்டாமைகள், கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிப்பட்டனர்.