துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் கொட்டையூர்,கருப்பம்பட்டி,திருமானூர் சாலையில் ஐயாற்றின் குறுக்கே ரூ6.50 கோடி புதிய உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. கொட்டையூர் ஊராட்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஐயாற்று குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்க தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த வைத்திருந்தனர்.
கொட்டையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மோகன்தாஸ் தனது பதவி காலங்களில் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தார். இதனை தொடர்ந்து கொட்டையூர் தலைவர் மற்றும் ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதால் கொட்டையூர் ஊராட்சியில் உள்ள கருப்பம்பட்டி கலிங்கமுடையான்பட்டி இடையே உள்ள அய்யாற்றின் குறுக்கே ரூபாய் 6.50 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று (27/02/2028) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கொட்டையூர் ஊராட்சி பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், அண்ணாதுரை, முன்னாள் கொட்டையூர் தலைவர் மோகன்தாஸ் மற்றும் ஒப்பந்ததாரர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்