தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தாா். அதன்படி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு வழங்கினாா்.