​பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்காக இன்று கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுஞ்சித்திரி கலைஞர் குனியமுத்தூர் UMT ராஜா ஒரு அபூர்வமான வரவேற்பை அளித்துள்ளார்.


​நிஜத் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது போல, தமிழக மக்களின் இதயங்களில் நமது முதல்வரின் மீதான அன்பும் மதிப்பும் பெருகிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில், உண்மையான தங்கத் துகள்களைக் கொண்டு முதல்வரின் தத்ரூபமான ஓவியத்தை அவர் வடிவமைத்துள்ளார்.

​மக்களின் ‘தங்க மகனாகத்’ திகழும் முதல்வரை வரவேற்க, தங்கத் துகள்களை விடச் சிறந்த பொருள் வேறில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் கலைஞரின் இந்த நுணுக்கமான படைப்பு, தற்போது அனைவரின் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *