தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40 அங்கன்வாடி மையத்திற்கு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மரத்தால் ஆன கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி சாயிராபானு மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி லதா , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய மாவட்ட திட்ட அலுவலர் அவர்கள் இந்த கல்வி உபகரணங்கள் மூன்றாவது முறையாக அங்கன்வாடி மையத்திற்கு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக வழங்கப்படுகிறது இந்த கல்வி உபகரணங்கள் எங்கள் அங்கன்வாடி மையத்தில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அவர்கள் கல்வி கற்கும் முறை மேலும் சுலபமாகி உள்ளது இதுபோல அவர்கள் கொடுக்கக்கூடிய கல்விப் பொருளும் தரமானதாக உள்ளதுஎன்றும் இது போன்ற சேவைகளை மேலும் தொடர எங்களுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும் என்று கூறினார்

தொடர்ந்து சிறப்புரை வழங்கிய சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் தஞ்சாவூர் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் .அந்தோணி ராஜ் அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மரத்தாலான படிப்புப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் அவர்களது வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று கூறினார் மேலும் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்களது தனித்திறமை வளர்த்துக் கொள்வதற்கு இந்த மரத்தாலான படிப்புப் பொருட்கள் வழி வகுக்கும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியை ஏற்பாடுகளை சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் செய்திருந்தார் இதில் அங்கன்வாடி மைய ஆசிரியைகள் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் மரத்தாலான படிப்புப் பொருட்கள் வழங்கிய சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட்க்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *