கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது ஆண்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது ஆண்டு விழா கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா அனைவரையும் வரவேற்றார் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர் எம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.மரியநிர்மலா சின்னமனூர் கே வி ஏ பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.கிருஷ்ணலதா காமய கவுண்டன் பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. கிருஷ்ணவேணி கூடலூர் என் எஸ் கே பி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. வெங்கட் குமார் பெண்களின் நடைமுறை பற்றியும் பெண்களின் கல்வி முறை பற்றியும் கல்லூரி காலங்களில் மாணவிகள் மிகவும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு நல்ல கருத்துக்களை பேசி சிறப்புரையாற்றினார்கள்

கல்லூரி நிறுவனச் செயலர் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ பேசும்போது கல்லூரி காலத்தில் மாணவிகள் புத்தகம் வாசிப்பின் அவசியம் செல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் நல்ல சிந்தனைகள் நல்ல வார்த்தைகள் நல்ல பழக்கவழக்கங்கள் மாணவிகளின் எதிர்கால விதியை தீர்மானிக்க கூடியது நல்லது என்று பல்வேறு கருத்துக்களை மாணவிகளையே பேசி சிறப்பு உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *