திருவாரூர்., மார்ச். 01

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் 27 வது வார்டு திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் ஐநூற்று பிள்ளையார் கோவிலில், திமுக தலைவரும் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 27ஆவது வார்டு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *