திருவாரூர் செய்தியாளர்
V, செந்தில் குமார்,
மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை! திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூரில் உள்ள பெரியார் அண்ணா சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது,
சமூகநீதி, மாநில உரிமை மற்றும் திராவிடக் கொள்கைகளை வலியுறுத்தி, பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களால் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க) 33-ஆம் ஆண்டு துவக்க விழா இன்று (மே 6, 2026) கோலாகலமாகத் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, திருவாரூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக திருவாரூர் ஒன்றியம் திருவாரூர் நகரப் பகுதி தொண்டர்கள் ஏராளமான பங்கு பெற்று சிறப்பித்தனர்,
திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் காசி சிவ வடிவேல் மாநிலக் கொள்கை விளக்க அணி செயலாளர் கூடலூர் சீனிவாசன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கமலவேந்தன் திருவாரூர் நகர செயலாளர் கபிலன் ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன் இளைஞரணி செயலாளர் ஹரிஹரன் மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் தொண்டரணி மகேஷ், ம.தி.மு.கபொதுக்குழு உறுப்பினர் அலிவலம் ராஜு, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மாவட்ட பொருளாளர் காமராஜ், பாலமுருகன், மற்றும் ஏராளமானோர்
திருவாரூர் நகர, பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.