நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே முதல்வராக பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்:எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய தவெக நிர்வாகி.

தமிழக அரசியல் சூழலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், கட்சித் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார்.இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கட்சி நிர்வாகி ஒருவர் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். நாகை நகராட்சிக்கு உட்பட்ட சாமந்தான் பேட்டை பகுதியைச் சேர்ந்த 11வது வார்டு செயலாளர் கதிர்வேல், தனது குடும்பத்தினர் பிரபாவதி மற்றும் ராகுல் ஆகியோருடன் கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் சிறப்பு அர்ச்சனை செய்து, கோவிலை சுற்றி அடி பிரதட்சணம் செய்து பக்தியுடன் வழிபட்டனர்.

கதிர்வேல், “ஜோசப் விஜய் முதல்வராக வந்தால், எட்டுக்குடி முருகன் கோவிலில் மொட்டை அடித்து வழிபடுவேன்” என முன்பே வேண்டுதல் வைத்திருந்ததாகவும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஊழல் லஞ்சமற்ற ஆட்சி அமைய வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்,


தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மா.சுகுமார் வழிகாட்டுதலின் படி கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எட்வின் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றிய பொருளாளர் மருத்தியம்மாள், ஊராட்சி செயலாளர்கள் எட்டுக்குடி தமிழ்செல்வன், திருவாய்மூர் கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முதல்வர் பதவியேற்பை முன்னிட்டு, நேர்த்திக்கடன் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்த சம்பவம், அப்பகுதியில் கவனம் ஈர்த்துள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *