தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்,
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை இன்று திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுக கட்சி சார்பில் கவுன்சிலர்கள் ரம்யா சரவணன், ஸ்டெல்லாநேசமணி, ரேவதி கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள், இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்