சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப் பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, எனவே கர்நாடக இசைப் பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டார்.


இதன் பொருட்டு தியாகராஜரை போற்றும் வகையில் தஞ்சாவூரில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பத்மஸ்ரீ சீனிவாசன் வாய்ப்பாட்டு, சுப்பிரமணி வயலின், கரன் சல்வாடி மிருதங்கம், கிருஷ்ணசாமி கடம் ஆகியோரின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான இசை ரசிகர்கள் கலந்து கொண்டு ரசித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *