எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம். துர்கா ஸ்டாலின் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாக விளங்கக்கூடிய இக்கோவிலில் சுவாமி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் என அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்திர பெருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனை தொடர்ந்து அம்பாள் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தினந்தோறும் வீதி உலாவும் முக்கிய விழாவான சகோபுரம், திருக்கல்யாணம் திருவிழாவும் நடைபெற்றது.
தொடர்ந்து 9 ம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது . தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகன் வள்ளி. தெய்வாணை, பிரம்ம வித்யாம்பிகையுடன் கூடிய சுவேவேதாரனேஸ்வரர் சண்டிகேசவர் உள்ளிட்ட சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்திருந்தனர்.
தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் துர்காஸ்டாலின் சீர்காழி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து நான்கு வீதிகள் வழியாக தேர் மாலை நிலையை வந்து அடையும். வீடுகள் தோறும் பூஜைகள் செய்து வழிபாடும் மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.