IIFL கேபிடல், ஃபேஷன் என்டர்பிரனர் ஃபண்ட் (FEF) மற்றும் ஜெம் புற்றுநோய் மையம் ஆகியவை இணைந்து நடத்திய இதில்,60 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுப்பு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘டிரைவ் வித் பர்ப்பஸ்’ (Drive with Purpose) என்ற தேசிய அளவிலான கார் பேரணி கோவையில் நடைபெற்றது.

தலசீமியா (Thalassaemia) மற்றும் புற்றுநோய் (Cancer) குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை,ஜிட்டோ கோவை கிளை மற்றும் அதன் மகளிர் பிரிவு இணைந்து நடத்தினர் கோவை இராமநாதபுரம் ஜெம் மருத்துவமனை முன்பாக நடைபெற்ற இதில் சுமார் 70 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து ஊர்வலமாக சென்றன…

முன்னதாக பேரணியை ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு,மற்றும் இயக்குனர் பிரவீண் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்..

இந்தப் பேரணியில் ஏராளமானோர் தங்களது கார்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் பங்கேற்றனர் ‘புற்றுநோய்க்கு நல்ல ஆன்சர்’ (Cancer-க்கு நல்ல Answer) என்ற கருப்பொருளை மையமாக வைத்து, சமூகப் பொறுப்புணர்வுடன் நடைபெற்ற இந்தப் பேரணி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சியில் ஜிட்டோ கோயம்புத்தூர் கிளை தலைவர் ராஜேஷ் போரா,செயலாளர் அபிஷேக் மேத்தா,அனில் ரங்கா,ஜிட்டோ மகளிர் பிரிவு தலைவர் ரீனா கோத்தாரி,செயலாளர் கரீஷ்மா,ஒருங்கிணைப்பாளர் அனிதா ரங்கா,ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் சித்ரா மனோகர்,செயலாளர் பீனா, உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *