C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் ன தெரிவித்துள்ளார்

2027 ஆட்சேர்ப்பு ஆண்டிற்கான அக்னிவீர் (ஆண் & பெண்) மற்றும் மண்டல / மத்திய பிரிவுகள் தொடர்பான அறிவிப்பு 13 பிப்ரவரி 2026 அன்று www.joinindianarmy.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை Recruiting Office (Headquarters) கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி (UT) யூனியனின் புதுச்சேரி மாவட்டம், மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் குழுமத்தினை சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிவீர் பொது கடமை (Agniveer General Duty), அக்னிவீர் தொழில்நுட்பம் (Agniveer Technical), அக்னிவீர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் (10ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் (8ம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் பார்மா (Sepoy Pharma), அக்னிவீர் பொது கடமை (பெண்கள் இராணுவ போலீஸ்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிவீர் விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதிக்கேற்ப இரண்டு பிரிவுகள் வரை விண்ணப்பிக்கலாம். CEE (Common Entrance Exam) தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ITI / டிப்ளமோ மற்றும் NCC தகுதி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் மட்டுமே ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செயல்முறை 13 பிப்ரவரி 2026 முதல் தொடங்கி 01 ஏப்ரல் 2026 அன்று முடிவடையும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஜூன் 2026 (உத்தேசமாக) நடைபெறும். அதற்கான அட்மிட் கார்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தையும் தங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் அடிக்கடி சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள்
Recruiting Office (Headquarters), Chennai-ஐ தொடர்புகொள்ளலாம்:
Fort Saint George Complex, Chennai-600009 என்ற முகவரி மற்றும் மற்றும் 044-25674924 தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம். 
தகுதி அளவுகோல்கள், கல்வித் தகுதிகள், மருத்துவ தரநிலைகள், தேர்வு முறை மற்றும் விதிமுறைகள் பற்றிய மற்ற விவரங்கள் 17 ஜனவரி 2026 அன்று வேலைவாய்ப்பு செய்தியில் வெளியிடப்பட்ட Recruitment Advertisement No. CBC 10803/13/0025/2526 மற்றும் 01/2027 ஆட்சேர்ப்பு இணைய அறிவிப்பில் வெளியிடப்பட்டவையே அமலில் இருக்கும்.

ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி, நியாயமான மற்றும் வெளிப்படையானது.யாரையும் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யலாம் அல்லது சேர்க்கை செய்து தரலாம் என்று கூறும் மத்தியஸ்தர்கள் / மோசடிக்காரர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் சரியான திறமை அடிப்படையில் தேர்வை உறுதி செய்ய வேண்டும். மத்தியஸ்தர்கள் அல்லது முகவர்களுக்கு இதில் எந்த வகையிலும் பங்கு இல்லை. எனவே அத்தகைய முகவர்கள் / நிறுவனங்களால் ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *