நன்னிலம்.,
திருவாரூர் மாவட்ட த்தில் சம்பா தாளடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் மாவட்டம் முழுதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மேக மூட்டமாக இருந்த நிலையில் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் முட்டைகளும் மழையில் நனைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைவதற்கு சேமிப்புக் கிடங்களுக்கு லாரிகள் மூலம் நெல் எடுத்து செல்ல தாமதம் ஆகிறது என கூறப்படுகிறது. மேலும் நெல் மூட்டைகளை மூடுவதற்கு தேவையான தார்பாய்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது..
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நெல் மூட்டைகள் நனைந்து நெல் முளைக்கும் நிலை வந்தால் விவசாயிகளுக்கும்..அரசுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.