குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பனந்தாள் ஜமாஅத் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார் திருப்பனந்தாள் ஒன்றிய ஒருங்கினைந்த ஜமாஅத் முன்னிலை வகித்தனர் அனைவரையும் ஜமாஅத் தலைவர் ஆசாத் அலி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மலேசியா தூதுரகம் சென்னைதுணை தூதரக அதிகாரி சரவண குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில்
மார்க்க அறிஞர் முகமது அர்சத் கலந்துகொண்டு பேசியதாவது:-
இஸ்லாமியர்களுக்கு இறை அச்சம் ஏற்பட வேண்டும் என்பதால் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று நோன்பு ஆகும்.ரமலான் வந்து விட்டால் தீமையான காரணங்கள் தடுக்கப்பட வேண்டும், நன்மையான காரணங்கள் அதிகப்படுத்த வேண்டும் என்பதால்
இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து 14 மணி நேரத்திற்கு கூடுதலான இடைவெளியில் எவ்வித ஆகாரங்கள் உண்ணாமல் , தண்ணீர் கூட பருகாமல் மாலையில் வீடுகள் மற்றும் பள்ளிவாசல் களில், நடைபெறும் நோன்பு கஞ்சி அறிந்துவிட்டு நோன்பை முடிப்பார்கள்.
மேலும் ரமலான் மாதத்தில் தான் இறைவேதம் முழுமை அடைந்த மாதமாக இருப்பதால் இஸ்லாமியர்கள் இரவில் சிறப்பு தொழுகையிலும் ஈடுபடுகின்றனர் ரமலான் மாதம் வந்து விட்டால் இஸ்லாமியர்கள் தங்கம், வெள்ளி, வியபார பொருட்கள், விவசாய நிலங்கள், ரொக்க கையிருப்பு, என தங்களது ஆண்டு வருமானத்தில் 2.5 சதவீதத்தை கணக்கிட்டு ஏழை வரி எனப்படும் வறுமை ஒழிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினர்.
முன்னதாக வட்டார செயலளர் ஜாஹீர் உசேன் நலிவடைந்த பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வட்டார ஐக்கிய ஜமாஅத் சார்பில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள், சமுதாய தோழமைகள், அனைவரும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறந்தனர்.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் அப்துல் மாலிக் நன்றி கூறினார்.