தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அணி எண் 68 (பெண்கள்) சார்பில் 09.03.2026 அன்று புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அமர்வில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்தல் நடைமுறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் . அந்தோணி ராஜ், வருவாய் ஆய்வாளர் . தேவசகாயம் (வட்டாட்சியர் அலுவலகம்), தாமிரபரணி வடகால் பாசன நீரை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
பிற்பகல் அமர்வில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் பேனல் வழக்கறிஞர் சுதர்சன் மற்றும் பராலீகல் வாலண்டியர் . ஐ. பியூலா விஜயா ரூபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சட்ட உரிமைகள், சமூக நீதி மற்றும் சட்ட உதவியின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் II B.Sc. இயற்பியல் மாணவி எம். பேச்சியம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக II B.Sc. இயற்பியல் மாணவி எம்.அருள் தேவி நன்றி உரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் NSS அணி 68 மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை வ.உ.சிதம்பரம் கல்லூரி NSS அணி 68 திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி சிறப்பாக வழிநடத்தினார்.