தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

கிராவல் மண் கடத்தல்: லாரி, ஜேசிபி பறிமுதல் – 3 கைது குண்டடம் போலீசார் விசாரணை.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியதாக ஒரு லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டடம் அருகே மானூர்பாளையத்தை அடுத்த குழந்தைப்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த TN56 2143 பதிவெண் கொண்ட லாரி மற்றும் TN59 CH4638 பதிவெண் கொண்ட ஜேசிபி இயந்திரத்தை குண்டடம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி வந்த வெல்லம்பட்டி ஏடி காலனியை சேர்ந்த மகுடீஸ்வரன் (27), மானூர்பாளையத்தை சேர்ந்த பைந்தமிழ் பாரி (26), உடுமலையை சேர்ந்த பேரரசு (19) ஆகிய 3 பேரிடம் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *