தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நான்கு வழி சாலை அதிகப்படுத்திய பிறகு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது குறிப்பாக அலங்கியம் பைபாஸ் சாலை உடுமலை பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிக்னலை மதிக்காமல் லாரிகள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது.

அத்துடன் அவர்களை காப்பாற்றும் பொறுப்பு ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு உண்டு எனவே இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை அழைத்து தாராபுரம் காவல் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் தாராபுரம் காவல் நிலையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்

அறிவுறுத்தல் நோயாளிகள் மற்றும் விபத்து ஏற்படும் மக்களுக்கு எந்த வித இடையூறும் இன்றி அவர்கள் அணிந்திருக்கும் நகை மட்டும் பணங்களை பாதுகாப்பாகவும் முதலுதவி செய்து பிறகு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும் அன்பாக இருக்க வேண்டும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல்துறையினருக்கு உடனே தெரிவிக்க வேண்டும் சட்டவிரோதமாக செயல்படும் நபர்களுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது ஓட்டுநர்கள் உதவியாளர்கள் நல்ல உடைகளை அணிய வேண்டும் அதிக ஒலிகளை எழுப்ப வேண்டாம் விதி மீறல்கள் மீறக்கூடாது அப்படி மீறினால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்கப்படும் தாராபுரம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும் வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பேசக்கூடாது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலில் காப்பாற்ற நீங்கள்தான் முக்கியமானவர்கள் ஆகையால் அவர்கள் குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் உங்களை நம்பி வாழ்வார்கள் நோயாளிகளை மாற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பொழுது போட்டி போட்டுக் கொண்டு அதிக பணங்களை வாங்க கூடாது காவல்துறையும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் பொதுமக்களுக்கு ஒரு பாலமாக இருந்து பாதுகாக்க வேண்டும் என்று தாராபுரம் டிஎஸ்பி சிவக்குமார் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாசினி உள்ளிட்டோர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *