பக்தர்கள் வழி நெடுக மலர்கள் தூவி வரவேற்பு….

மதுரை சித்திரை திருவிழாவிற்கு சென்ற அழகர் மீண்டும் அழகர் மலையை வந்தடைந்தார்.

சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஏப்.29ம் தேதி மாலை கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். தொடர்ந்து எதிர்சேவை, மே 1ம் தேதி வைகையாற்றில் இறங்கு தல், மறுநாள் இரவு தசாவ தாரம் உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்றார். மே 4ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளி அழகர்மலையை நோக்கி புறப் பட்டார்.

நேற்று காலை தனது இருப்பிடமான அழகர் மலையை வந்தடைந் தார். அப்போது கோட்டை வாசலில் கோயில் யானை சுந்தரவல்லி வரவேற்று அழைத்துச்சென்றது. பின் னர் கோயில் காவல் தெய் வமான கருப்பண சுவாமியிடம் உத்தரவு பெற்று கோயிலின் இருப்பிடம் வந்தடைந்தார்.


இருப்பிடம் நோக்கி வந்த அழகருக்கு வழியெங் கும் வண்ண மலர்களை தூவி பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் 21 பூசணிக்காய்களை அழ கரை சுற்றி எடுத்து வந்து திருஷ்டி கழித்தனர். பின் னர் கோயிலை வந்தடைந்த அழகருக்குச் சிறப்புப் பூஜை கள் மற்றும் தீபாராதனை கள் நடைபெற்றன. உற்சவ சாந்தியுடன் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *