கோவையில் மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக சமுதாய நல்லிணகத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவையில் தொடர்ந்து அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கி வரும் மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பினர் தீபாவளி,பொங்கல்,ரம்ஜான் என அனைத்து பண்டிகை நாட்களிலும் உணவு வழங்கி வருவதோடு, சமுதாயம் சார்ந்த பல்வேறு சமூக நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்..

இந்நிலையில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக சமுதாய நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் என்.எஸ்.கே.அரங்கில் நடைபெற்றது.

மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவன தலைவர் கோவை சுலைமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ,ஆலோசகர் ஜெம் சாதிக்,உம்மர்,சீத்தாராமன்,நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்..

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் கோட்டை இதயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் தலைவர் இனாயத்துல்லா, மற்றும் திமுக மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் என் எஸ் கே கலீல்,கவுன்சிலர் அஹமது கபீர், சென்னை மொபைல்ஸ் சம்சு அலி,தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர் வேலுச்சாமி,சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.உசேன்,கரும்புகடை பகுதி செயலாளர் ஜெய்லாப்தீன்,மற்றும் அப்துல் ஜப்பார்,,சோமு பிராப்பர்டீஸ் சோமசுந்தரம்,கோயமுத்தூர் மொபைல்ஸ் மற்றும் சர்வீஸ் அசோசியேஷன் தலைவர் மன்சூர் ,செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் ஜமாத் தலைவர் இப்ராஹிம்,குவ்வத்துல் இஸ்லாம் ஜமாத் செயலாளர் நவ்ஃபுல். ஹிதாயத்துல் இஸ்லாம் ஜமாத் துணைச் செயலாளர் அகமது. அதிமுக வார்டு செயலாளர் கேபிள் பஷீர்,சிங்கை சுலைமான் டி எம் எஸ் அப்பாஸ் அரசன் அஜ்மீர் கான் கோட்டை செல்லப்பா,சித்திக், கோவை பைசல் இப்ராஹிம், சலீம், தாஹிர்,குல் முஹம்மத் ஹக்கீம், அபுதாஹிர், இப்ராஹிம், முத்தப்பா அபிப் ரஹ்மான், மன்சூர்,அசார்,தாஹீர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

விழாவில் கலந்து கொண்டோர் பேசுகையில்,இது போன்ற மத நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்ச்சிகள் அனைத்து சமுதாய மக்களின் ஒற்றுமையை காட்டுவதாக தெரிவித்தனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நோன்பு திறப்பதற்கான ஆரம்ப உணவாக நோன்பு கஞ்சி,பேரீச்சை,ரோஸ் மில்க்,வடை,பப்ஸ் வழங்கப்பட்டது..

இதனை தொடர்ந்து அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது..

இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு சமுதாயத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *