திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட தலைவர் ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது,தற்போது எரிபொருள்(சிலிண்டர்) தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால் இன்னும் ஒரு வார காலத்தில் கடையை அடைக்கும் சூழல் ஏற்படும்.தற்போது முழு அளவு உணவு வகைகள் தராமல் குறிப்பிட்ட வைகல் மட்டுமே பரிமாறக்கூடிய சூழ்நிலையில் உள்ளதால் மேலும் ஹோட்டல்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறோம்.
ஹோட்டல் தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் இது குறித்து போர்க்கால அடிப்படையில் எரிபொருள் (சிலிண்டர்) தட்டுப்பாடை தீர்த்து வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.