பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்!” – ஈரோடு மாயவரத்தில் தனியார் நிறுவனம் மீது திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டம் மாயவரம் பகுதியில், தனியார் நிறுவனம் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி திராவிடர் விடுதலை கட்சியின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டம் கிங் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்பு மகேஷ் சிறப்பு எழுச்சி உரையாற்றி, பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், நில ஆக்கிரமிப்புகளை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் அசோக் கண்ணன், சக்திவேந்தன், விடுதலை சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.பஞ்சமி நிலம் மீட்பு கோரிக்கை தொடர்பாக இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *