மார்ச் 15.
நாமக்கல் பரமத்தி
பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ்நாடு N DA கூட்டணியால் தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, என்ற தலைப்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பரமத்தி ஒன்றிய திமுக மற்றும் கபிலர்மலை ஒன்றிய திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே. எஸ்.மூர்த்தி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றிய திமுக மற்றும் கபிலர்மலை ஒன்றிய திமுக மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே எஸ் மூர்த்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்
அப்போது அவர் தெரிவிக்கையில் திமுக கலைஞர் ஆட்சி காலத்தில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் ஒவ்வொரு ஒரு வீடு விடாமல் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர் அடுப்பு கொடுத்தோம். மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு அமித்ஷா போன்றவர்களுக்கு தமிழக மக்கள் தேசிய முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதால் தான் இந்த கேஸ் விலையை உயர்த்தியதுடன் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளனர். மீண்டும் மக்களை விறகடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்
இதில் விமர்சிக்கப்பட்டது இந்த NDA கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள் மட்டுமே கூட்டணியில் உள்ளனர் தமிழ்நாட்டு மக்கள் NDA கூட்டணியை ஆதரிக்கவில்லை.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கனவு இல்லம், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கொடுத்திருக்கிறார்.
மகளிர் உதவித்தொகை, மகளிர் விடியல் பயணம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை, இலவச மடிக்கணினி திட்டம், இன்னும் எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மு.க. ஸ்டாலின் விளங்குகிறார். எண்ணற்ற திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைத்திட 2026 இல் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வராக மு க ஸ்டாலினை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியில். மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் KK. கணேசன்,பரமத்தி திமுக ஒன்றிய செயலாளர் தனராஜ், விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ்பிரபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், வாழை தினேஷ், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சரவணகுமார் பாண்டமங்கலம் நகர செயலாளர் முருகவேல் என்கிற பெருமாள், பரமத்தி நகர செயலாளர் ரமேஷ் பாபு, பேரூராட்சி தலைவர் மணி, திமுக ஒன்றிய பேரூர் நகரக் கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் மற்றும் திமுக தோழமைக் கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.