C K RAJAN
Cuddalore District Reporter
9488471235

கடலூர் ஆபீஸர் கிளப்பில் அலுவலர்களுக்கான பேட்மிட்டன் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆஃபீஸர்ஸ் கிளப்பில் பேட்மிட்டன் போட்டியினை தொடங்கி வைத்தார்.

ஆபீஸர் கிளப்பில் அலுவலர்களுக்கான பேட்மிட்டன் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆபீஸர் கிளப்பில் அலுவலர்களுக்கான பேட்மிட்டன் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,கடலூர் மஞ்சக்குப்பம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆபீஸர் கிளப் பேட்மிட்டன் அரங்கம் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றது.

அரசு அலுவலர்கள் உற்சாகத்துடனும் மனவலிமையுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் உடல் நலனை சிறந்த முறையில் பேணிட வேண்டும் என்பதற்காகவும் கிளப்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக இன்று அரசு அலுவலர்கள் பங்கேற்கும் பேட்மிட்டன் போட்டி நடத்தப்பட்டது. இதில் வருவாய் துறை அலுவலர்கள் ஒரு பிரிவாகவும் காவல் துறையினரின் மற்றொரு பிரிவாகவும் செயல்படும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன நான்கு பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

உடல் நலனையும் மனநலனையும் பேணி பாதுகாப்பது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியாகவும் இதனை வலியுறுத்தும் வகையிலும், பணியில் முழு கவனத்துடனும் கூடுதல் உற்சாகத்துடனும் பணியாற்றிட வேண்டும் என்பதற்காக போட்டிகள் நடத்தப்பட்டது அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர் என மாவட்ட ஆட்சிக் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திருமதி பிரியங்கா, சிதம்பரம் சார்ஆட்சியர் கிஷன்குமார் பயிற்சி, ஆட்சியர் திருமதி மாலதி, வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *