துறையூர் மார்ச் -16 திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேஸ் தட்டுப்பாடு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் சிலை முன்புறம் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமார்,மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் தலைமையில் 15-03-2026 அன்று காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், அண்ணாதுரை, சிவசரவணன், கலை இலக்கியப் பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார்,வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீதர்ஷினி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ், பொதுக்குழு கிட்டப்பா,நகர துணை செயலாளர் பிரபு, நகர்மன்ற உறுப்பினர் வீர மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், பேச்சாளர் துரைப்பாண்டியன், இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார், காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் ராமநாதன், தேமுதிக கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை, திராவிடர் கழகம் மணிவண்ணன், தமிழ் புலிகள் ராஜா, காவேரி கணேசன், ரெங்கநாதபுரம் கார்த்திக், கண்ணனூர் குமார், உமாபதி, நரசிங்கபுரம் கதிரேசன்,அம்மாபட்டி முருகேசன்,பிரீஸ் சரவணன்,நகர இளைஞரணி பிரபு,மோகன், சசிகுமார், நல்லுசாமி, வாலீஸ்புரம் கார்த்திக், தமிழரசன், மற்றும் தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் நீதி மையம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்