மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்திற்கு சுத்தமான. சுகாதாரமான அன்ன தான கூடம் என்று மத் திய அரசு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோவில் துணை கமிஷனரிடம் வழங்கினார்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவி லுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடு களில் இருந்து தினமும் பல் லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கி றார்கள். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு முதலில் மதியம் நேரம் மட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை முதல் இரவு வரை தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள்
அன்னதானம்-சாப்பிட்டுவருகிறார்கள். இதற்காக பழைய அன்னதான கூடம் மாற்றி பட்டது. அமைக்கப்பட்டு நவீன முறையில் உருவாக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு தர மான மற்றும் சுகாதாரமான உணவு வழங்குவதற்காக அர சின் உத்தரவின்படி கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில் மத்திய அரசின் குடும்பநல அமைச்சகத்திற்கு உட்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் கோவில் அன்னதான கூடத்தை தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர். அதில் அன்னதான கூடத்தில் சுத்தம், சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவது குறித்தும், அங்கு உணவு தயாரிக் கும் முறைகள், உணவுக்கு தேவையான தரமான பொருட்கள். தயார் செய்த உணவுகளை பக்தர்களுக்கு பரிமாறுவது குறித்து என அனைத்தையும் ஆய்வு செய்தனர். இது தவிர உணவை பரி மாறுபவர்கள் அனைவருக்கும் மருத்துவ சான்றிதழ் மற் றும் சுத்தமான, சுகாதாரமான
உணவா? என ஆய்வகத்தில் பரிசோதனையும் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அன்னதான கூடம் சுத்த மான, சுகாதாரமான அன்ன தான கூடம் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மத்திய அரசின் நற்சான்றிதழ் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்து வழங்கப் பட்டுள்ளது. இந்த சான்றிதழை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *