மன்னார்குடி., மார்ச்.16
தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ அணிவகுப்பு பேரணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும் , ஜனநாயக ரீதியாகவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பேரணி மன்னார்குடியில் தேரடியில் தொடங்கி பந்தலடி , காந்தி ரோடு , நடேசன் தெரு ,உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தேரடியில் முடிவடைந்து.
இந்த பேரணியில் துணை ராணுவத்தினர் ,தமிழக போலிசார் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்