மன்னார்குடி., மார்ச்.16

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 32 லட்சத்து 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது.

நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாததால் நெல்லின் ஈரப்பதம் குறைந்து எடை இழப்பு ஏற்படுவதால், எடை இழப்பு ஏற்பட்ட நெல்லுக்கான பணத்தை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதை கண்டித்தும்.

எடை இழப்புக்கான பணத்தை கட்டினால் மட்டுமே மீண்டும் வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதை கண்டித்தும் மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும்.

குறிப்பாக காளாஞ்சிமேடு, கிடாரங்கொண்டான் உன்கிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் சேமிப்பு கிடங்குகளை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி TNCSC INTUC தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு கொள்முதல் பணியாளர்கள் தேக்கமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அதிகாரி மற்றும் மேலாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை மண்டல தலைவர் பி. அம்பிகாபதி, மண்டல செயலாளர் பா.ராஜீவ் காந்தி, மண்டல துணைச் செயலாளர் எஸ் முருகன் மற்றும் மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *