மன்னார்குடி., மார்ச்.16
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் ஊராட்சியில் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் மோகன் ஏற்பாட்டில் ஏழு கிளைச் செயலாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் .
இந்த இணைப்பு விழாவில் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி , பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் , பாசறை ஒன்றிய செயலாளர் அர்ஜுனன் , மாவட்ட பிரதிநிதி சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர் .