குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட மகளிர் தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் டி மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பிறகு பேசியதாவது மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தையும், அறிவு, வாய்ப்புகள் மற்றும் தலைமைத்துவம் மூலம் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் மாவட்டத் தலைவர் லயன் செல்வ மகேஸ்வரி ராமதுரை தலைமை தாங்கினார். தலைவர் லயன் ரஜினிபாய் செந்தில் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக கூட்டு மாவட்ட தலைமைப்பண்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட நெறியாளர் லயன் முகமது ரபி பங்கேற்று பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினார்.
தொடர்ந்து லயன் சவரி ராஜ், லயன் விஜயலட்சுமி சண்முகவேல், லயன்டாக்டர் ஸ்டாலின, ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.
கும்பகோணம் மாநகரில் உள்ள சாதனை படைத்த பெண்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி அவர்களை சிறப்பித்தனர் மாணவியர் கலை நிகழ்ச்சிகள்,ரங்கோலி,சமையல்,சிகை அலங்காரம்,குத்து விளக்கு அலங்காரம்,குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், வழங்கப்பட்டன முன்னதாக செயலாண்மைக் குழு தலைவர் லயன் மீனா செல்வம் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் லயன் ரத்னகுமார் நன்றி கூறினார்.இதில் செயலாண்மைக் குழு செயலாளர் கலைச்செல்வி சுவாமிநாதன்,பொருளாளர் ராதா பாஸ்கரன் மற்றும் அனைத்து லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.