தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

மருதூரில் குடிநீர் பிரச்சினை-66 “எழுத்து உறுதி தரும் கட்சிக்கே வாக்கு” 25 கிராம மக்கள் எச்சரிக்கை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருதூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் குடிநீர் தட்டுப்பாடுமீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பாசன மேலும், உப்பாறு அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் விடப்படாததால், விவசாய நிலங்கள் வறண்ட நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் பயிரிட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலையும் தொடர்கிறது.

இந்த பிரச்சினையை வலியுறுத்தி, 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை மரு தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது தேர்தல் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என உறுதி அளித்ததை யடுத்து மக்கள் வாக்களித்தனர். ஆனால் அதன் பின்னரும் ஆட்சி மாறி மாறி அமைந்த போதிலும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள்,
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய முடிவை எடுத்துள்ளனர்.

திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளில் யார் மருதூர் மற்றும் சுற்றியுள்ள 25 கிராமங்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கிறார்களோ, அந்தக் கட்சிக்கே வாக்களிப்போம் என அறிவித்துள்ளனர்.

இதனை விளக்கும் வகையில் பதாகைகள் அமைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்த குண்டடம் காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் காலத்தில் இத்தகைய பதாகைகள் அமைப்பது விதிமுறைகளை மீறும் செயல் என எச்சரித்தனர். இருப்பினும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்து, 25 கிராமங்களிலும் பதாகைகள் அமைக்கும் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்.

தங்களின் வாக்குரிமையை போராட்டமாக பயன்படுத்தத் தயாராக இருப்பது நீடித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், மக்கள் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *