கோவையில் சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை மாவட்ட கிளை சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது..
கியோகுஷின் கராத்தே ஸ்டைல் எனும் பிரிவில் நடைபெற்ற இதில் கோவை,சென்னை,திருப்பூர்,கன்னியாகுமரி,சேலம்,மதுரை, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..
முன்னதாக போட்டிகளின் துவக்க விழா போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி ஜஸ்டின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச கராத்தே அமைப்பின் இந்திய கிளை தலைவர் ஆனந்தலால் ராஜூ,மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் ஆகியோர் கலந்து போட்டிகளை துவக்கி வைத்தனர்..
இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் 5 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், , அதற்கு மேல் உள்ள வயதினருக்கு பொதுப்பிரிவு என போட்டிகள் நடத்தப்பட்டன கட்டா,குமித்தே என இரு வேறு பிரிவுகளில், நடைபெற்ற போட்டிகளில் மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்..
தற்காப்பு கலையில் முன்னனி கலையான கராத்தே கற்பதற்கு தற்போது மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும்,தற்போது இரண்டு நாட்களாக நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் கலந்து கொண்டுள்ளதாக சர்வதேச கராத்தே அமைப்பின் இந்திய கிளை தலைவர் ஆனந்தலால் ராஜூ தெரிவித்தார்..