என்.டி.ஏ கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சியின் முழு ஆதரவு


புதுச்சேரி,
வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,
ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் முக்கிய அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.கே. ராஜசேகர், புதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து,என்.டி.ஏ (NDA) கூட்டணிக்கு
நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கினார்.


இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் ஜி.தேவநாதன் டி.கந்தவேலு எஸ்.சத்தியநாராயணன் பி.பிரகாஷ் ஜே.சக்திவேல் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டு, கூட்டணிக்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.
இந்த முடிவு குறித்து தெரிவித்த ஏ.கே. ராஜசேகர்,“மக்களின் வாக்குகள் சிதறாமல்,
ஒரு வலுவான மற்றும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே
இந்த ஆதரவு வழங்கப்படுகிறது” என்று கூறினார்.


மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ளகட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும்,என்.டி.ஏ கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யமுழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.


புதுச்சேரி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல,முதல்வர் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

செய்தியினை தங்கள் செய்தி பிரிவின் மூலம் சிறப்பான செய்தியாக வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு. ஏ.கே.ராஜசேகர் நிறுவனத் தலைவர் ஏ.கே. ஆர்.தேசிய மக்கள் கட்சி புதுச்சேரி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *