தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் நாரணபுரம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மொத்தம் 600 தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட தெற்கு செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இலவச தென்னங்கன்றுகள் மின்விசை தெளிப்பான் மற்றும் தார்பாலின் போன்றவற்றை மானியத்தில் வழங்கினார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் வரவேற்புரை ஆற்றினார்
ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் சென்றடைய களப்பணியாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு முன்னுரை ஆற்றினார்.

வேளாண்மை துறை நல திட்டங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விரிவுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை பஞ்சாயத்து தலைவர் செல்வி மணிமாறன் வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா உதவி வேளாண்மை அலுவலர் புஷ்பமாரி மற்றும் சுமன் ஆகியோர் செய்திருந்தார்கள். உழவர் நண்பர் குமரகுருபரன் ஒருங்கிணைப்பில் விவசாய பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *