தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் கோவில் திருவிழாவில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கிய தமிழக முன்னாள் முதல்வர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம் பேருராட்சி வாழையாத்துபட்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் முன்னாள் முதலமைச்சரும் போடி தொகுதி திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்
இந்நிகழ்வில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி ஐயப்பன் பூதிப்புரம் பேருர் திமுக செயலாளர் பேருராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் பேருராட்சி துணை தலைவர் எம் பொன்னையன் உள்பட மாவட்ட ஒன்றிய பேரூர ஊரக திமுக நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்