திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கும் குப்பை சேகரிக்கும் இடத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ பற்றி எரிந்து மளமளவென பரவியதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

எர்ணாவூர் மின்வாரிய குடியிருப்பு பகுதி அருகே காலியான இடத்தில் சிமெண்ட் ஓடு போடப்பட்ட குப்பைகள் சேகரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்காக குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டு இருந்தன

அதிக குப்பைகள் நிறைந்த இடத்தில் இன்று அதிகாலைதிடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது இந்த தீயானது வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் தீயணைப்பு துறையினர்

துரிதமாக செயல்பட்டு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர்

மூன்று மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் அதிகாலை வேளையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது

தேவையில்லாத கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் குப்பை மக்காத குப்பை என தேங்கி இருந்த இடத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து

எண்ணூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *