நாமக்கல்
காங்கிரஸ் சார்பில் நாமக்கல் கோழி பண்ணையில் பணியாற்றும் வட இந்தியர் மற்றும் தமிழக ஊழியர்கள் மகளிர் தினம் விழா, ஹோலி பண்டிகை விழா தமிழர்களுடன் சேர்ந்து பரஸ்பரம் இணைந்து விழாவை கொண்டாடிய வடநாட்டு தொழிலாளர்கள்

நாமக்கல் நகர காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மோகன் முன்னிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் ஓ.பி.சி அணி துணைத் தலைவர் டாக்டர் வெ. செந்தில் தலைமையில் நாமக்கல் காவிரி பீட்ஸ் கோழி பண்ணை மற்றும் கோழி தீவன உற்பத்தி ஆலை வளாகத்தில் அங்கு பணியாற்றும் வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஆண் பெண் தொழிலாளர்கள் உலக மகளிர் தின விழா, மற்றும் ஹோலி பண்டிகை விழா சிறப்பாக கொண்டாடடினர்

முன்னதாக தெய்வங்களுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்திய பிறகு கோழிப்பண்ணை மற்றும் பல இடங்களில் பணிபுரியும் வடநாட்டு தொழிலாளர்கள் தங்களுக்குள்ள பரஸ்பரத்தை இணைந்து வெளிப்படுத்தும் விதமாக வண்ண மாவுகளை பூசி அன்பை வெளிப்படுத்தினர்

முன்னதாக பெண்கள் ஆண்கள் என வண்ணம் பொடி பூசி ஆட்டம் பாட்டம் நடத்தி ஹோலி பண்டிகை கொண்டாடினர்

அப்போது அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன
மேலும் தமிழகத்தில் அதிக அளவில் வட மாநிலத்தவர் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்குள் ஆதரவை பெருகும் நிலையில் இன்று பரஸ்பரஸ்பரம் நல்லுறவை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழர்களுடன் சேர்ந்து இந்த விழாவை வட இந்தியர்கள் கொண்டாடினர்

இந்த விழாவில் காவேரி கோழி பண்ணை மற்றும் காவேரி பீட்ஸ் நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *