தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர்

தாம்பரம், பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த தாம்பரம் வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் மற்றும் பல்லாவரம் ஐஜேகே வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் ஆர்.பி.ரோடு அண்ணா நகரில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா, முன்னாள் எம்எல்ஏ ப.தன்சிங்,பாஜக மாவட்ட தலைவர் ரகுராமன்,அமமுக மாவட்ட செயலாளர் ம.கரிகாலன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் செம்பாக்கம் வேதா சுப்பிரமணியம்,பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேசன்,ஐ.ஜெ.கே மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆனந்த் முருகன் தமாகா தலைவர் மகேந்திர வர்மன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அதிமுக பாஜக, பாமக, அமமுக,தமாகா, புரட்சி பாரதம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *