தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில் பிராண்டான ‘கோங்கு டூரிஸ்டர்’, கோவையில் தனது பிரத்யேக ஷோரூமை துவக்கியுள்ளது. புதிய ஷோரூமை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் பி.லுந்த் அவர்கள் ரிப்பான் வெட்டி தொடங்கிவைத்தார்.

கோவையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், சாயிபாபா காலனி, NSR சாலை பகுதியில் அமைந்துள்ள தனது ஷோரூம் மூலம், சுற்றுலா பயணிகள், பிசினெஸ் டிராவலர்கள் மற்றும் விடுமுறை பயணிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘All Travel Solutions Under One Roof’ என்ற நோக்கத்துடன், கோங்கு டூரிஸ்டர் பல்வேறு உயர்தர பயண தயாரிப்புகளை வழங்குகிறது.

இதில், நீடித்த தரமான ட்ராலிகள் மற்றும் சூட்கேஸ்கள், பேக்க்பேக், லேப்டாப் பேக், டஃபிள் பேக், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பயணத்திற்கு ஏற்ற டெக் சாதனங்கள், பயணத்திற்கும் உடற்பயிற்சிக்கும் ஏற்ற உடைகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா திட்டங்கள், மேலும் நெக் பிலோ, டிராவல் அடாப்டர்கள், ஆர்கனைசர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

இதுகுறித்து கோங்கு டூரிஸ்டர் நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு. நடராஜன் , திரு. கோவிந்தகிருஷ்ணன், திரு. கிருஷ்ணகுமார், திரு. மகாதேவன் ஆகியோர் கூறுகையில்,

சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் ‘கோங்கு டூரிஸ்டர்’ பிராண்டின் கீழ் ட்ராவல் ட்ராலிகள் மற்றும் கேரி-ஆன் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது எங்களின் முதல் பிரத்யேக ஷோரூம் ஆகும். வரும் காலங்களில், கொங்குமண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 5 புதிய ஷோரூம்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், விரைவில் பெண்களுக்கான பிரத்யேக ஹேண்ட் பேக் கலெக்ஷனையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அதேபோல், எங்களின் தயாரிப்புகள் விரைவில் ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றிலும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான தயாரிப்புகளை வழங்கும் நோக்கில், ஜிப், வீல் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம். எங்கள் அனைத்து தயாரிப்புகளுக்கும் ஒரு ஆண்டு உற்பத்தி உத்தரவாதம் வழங்கப்படுகிறது. ரூ.2,000 முதல் ரூ.23,000 வரை பல்வேறு விலை வரம்புகளில் எங்களின் தயாரிப்புகள் கிடைக்கின்றன. தரமும், நீடித்த பயனும், விலைக்கேற்ற மதிப்பும் என்பவற்றை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு வாடிக்கையாளரின் பயண திட்டமிடல் முதல், பயணத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதியை வழங்குவது எங்கள் முக்கிய நோக்கமாகும் , என்றனர்.

இந்த திறப்பு விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், காம்போ சலுகைகள் மற்றும் ஆச்சரிய பரிசுகள் வழங்கப்படுகின்றன. திறப்பு நாளையும் தொடர்ந்து வரும் வாரம் முழுவதும் இந்த சலுகைகள் வழங்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் பயண ஆர்வலர்கள் அனைவரும் நேரில் வந்து, இந்த பிரத்யேக ஷோரூமை பார்வையிட்டு அனுபவிக்குமாறு கோங்கு டூரிஸ்டர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *