செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பால்வினை தொற்று விழிப்புணர்வு வாரம் குறித்து குழு கூட்டம்

கல்பாக்கம் ஏப் 21
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி, சார்பில் பால்வினை நோய் பிரிவில் துறை தலைவர் மருத்துவர் முருகன் தலைமையில் இந்த பால்வினை தொற்று குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு. பிரியா பசுபதி கலந்து கொண்டு இலக்கு மக்கள் ஆரோக்கியம், எச். ஐ. வி, எய்ட்ஸ் , பால்வினை நோய் குறித்த ஆலோசனை வழங்கினார்.

இதில் உதவி பேராசிரியர்கள் மருத்துவர்கள் ஸ்ரீதர், ஜெயகல்யாணி, சுகந்தி மற்றும் தொண்டு நிறுவனம் ரியல் அறக்கட்டளை, சாஹித்யா, பிளாசம், ஸ்வாம், போன்ற நிறுவனத்தினர் இலக்கு மக்கள் மற்றும் பாலியல் தொழில் செய்யும் பெண்கள், ஆண்கள், திருங்கைகள் கலந்து கொண்டனர்.

எச். ஐ. வி நோய் வராமல் தடுக்க ஆணுறை பயன்பாடு பற்றி ஆலோசனை அளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் ஆற்றுப்படுத்துனர் ஹெலன், சுந்தரச்செல்வி, ஆய்வக நுட்பனர் அருணாச்சலம், டார்த்தி, திலகராணி, பணியாளர்கள், மணிகண்டன், நாகலட்சுமி, சரிதா,முருகன், விஜி, சரோஜினி, ஸ்டெல்லாமேரி, ஜானகி, தானியா, சித்தாரா முதலானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *