வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் அமமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கிற்கு கூட்டணி கட்சியான அமமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ராதாகிருஷ்ணன் மற்றும் மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி அமமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.சண்முகவேலு ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஆதரவு திரட்டும் வகையில் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை மரியாதை நிமித்தமாக அமமுகவின் தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் கே.எம்.குஞ்சாலி, வால்பாறை நகரச்செயலாளர் நெல்லை செல்வன் ஆகியோர் சந்தித்தனர் அப்போது வால்பாறை சட்டமன்ற தொகுதி நிலவரத்தை கேட்டறிந்த அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங் வெற்றி பெற உறுதுணையாக இருந்து நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்