பல்வேறு விமான நிறுவனங்களும் பயணிகளை ஈர்க்க புதிய புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் எனும் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தோஹா விமானநிலையமும், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையமும், சியோலின் இங்கியோன் விமான நிலையமும், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமானநிலையமும் இடம் பெற்றுள்ளன.

இவைகளைத் தொடர்ந்து இஸ்தான்புல், முனிச், சூரிச், நரிட்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தில்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *