மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!
மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் வடக்கு ஆடிவீதியில் கோலாகலமாக நடந்தது. திருக்கல்யாணத் தையொட்டி பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுக ளை செய்திருந்தது. வடக்கு ஆடி வீதிமேற்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண உள்ள மேடை வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந் தது. மலர்களால் மண மேடை அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.சித்திரைத் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்திருக்கல்யாணத் தைக் காண பல்வேறு பகு திகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவி லுக்கு வந்து திரண்டிருந்தனர்.
திருக்கல்யாணத்தையொட்டி திருக்கல்யாணத்திற்கான பூஜைப் பொருட்கள் மண மேடைக்கு எடுத்து வரப்பட் டன. தங்கக்குடத்தில் புனித நீரும் பன்னீர் செம்பில் பன் னீரும், தங்க சந்தன கும்பாவில் சந்தனமும் கொண்டு வரப்பட்டன. இதே போல் மேள தாளம் முழங்க மாலைகளும், பட் டாடைகளும் எடுத்துவரப் பட்டன.
தனிப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பிரியாவிடையும் மேடைக்கு வந்த னர். சுந்தரேசுவரன் தங்க கீரிடம் சூட்டி, வைர மாலை அணிந்து, பட்டு வேட்டி அணிந்து மணமகன் திருக் கோலத்தில் காட்சியளித் தார். அவரை தொடர்ந்து மீனாட்சி அம்மன் தனி பல் லக்கில் மேடைக்கு வந்தார். மீனாட்சிஅம்மன் பட்டு கட்டி, வைரம் பதித்த தங்க கிரீடம் அணிந்து இடுப்பில் மரகதத்தால் ஆன ஒட்டியா ணமும், கழுத்தில் ரத்தின ஆரமும், தங்க காசு மாலை உள்பட பல்வேறு அணிக லன்களையும் அணிந்து கையில் தங்க செண்டு ஏந்தி மல்லிகை, முல்லை, ரோஜா போன்ற பல்வேறு நறுமண மலர்களால் ஆன மாலை களை அணிந்து மணமகளின் அலங்காரத்தில் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
மீ னாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்ம னுக்கு மாலை அணிவிக்கப் பட்டிருந்தது. அவர்கள் மேடைக்கு வந்தபோது பக் தர்கள் பக்திபரவசத்துடன் மீனாட்சி அம்மனையும், சுந் ரேஸ்வர பெருமானையும் வணங்கினார்கள்.
மேடைக்கு பவளக்கனி வாய்ப் பெருமாள் தங்க கெண்டியுடன் தனிப்பல்லக் கில் மேடைக்கு வந்தார். இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியரும், தெய்வா ணையும் மணமேடைக்கு வந்தனர். திருமண மேடை யில் சுந்தரேசுவரருக்கு வலது பக்கத்தில் மீனாட்சியும், இடது பக்கத் தில் சுப்பிரமணியரும் அமர்ந்தகருந்தனர். திருமண ஏற்பாடுகள் தொடங்கி நடந்தன. ஹோம வளர்க்கப் குண்டங்கள் குண்டங்கள் வளர் பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந் வேத மந்திரங்களை முழங்கி னார்கள். முதலில் விக்னேஷ்வரர் பூஜையும், அனுக்ஞை பூஜையும் நடந்தன. இதைத் தொடர்ந்து வாஜன பூஜை, கும்ப பூஜை, பாலிகா பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. மணமக்களுக்கு மஞ்சள் காப்பு கட்டும் பூஜையும் நடந்தது. நிகழ்ச்சிகளை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் சார்பில் பக்தர்கள் செய்தனர். மணமக்கள் சார்பில் பக்தர் கள் இரண்டு பேர் மாலை மாற்றிக்கொண்டனர்.
இதன் பிறகு மணமக்களுக்கு ஆடை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் பட்டாடைகள். பட்டாடைகள் அணிவிக்கப் பட்டன.பிரியாவிடைக்கும்.பட்டாடை அணிவிக்கப் பட்டது. அதன்பிறகு வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதசுவரம் இசைக்க திருமறைகள் பாடி மண விழாவின் உச்சகட்ட மாக மங்களநாண் அணிவிக்ப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தீபாராதனைக காட்டப் பட்டது. மணமக்களான மீனாட்சிஅம்மன்-சுந்தரேசு வரருக்கு தீபாராதனைகள் நடந்தன. மீனாட்சி அம்மன் கழுத்தில் தங்கத் தாலி அணி விக்கப்பட்டதுடன் கோவி லில் கூடியிருந்த ஆயிரக்கணக் கானபெண்கள்தங்களது தாலியை எடுத்து குங்குமம் இட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர். ஏராளமா னோர் ஏற்கனவே மஞ்சள்கயிறில் முடிந்துவைத்திருந்த தாலிக் கயிற்றை தங்களது கழுத்தில் கட்டிக்கொண்டனர்.
பூஜைகள் முடிந்தபிறகு மணமேடையில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரும், பவளக்கனிவாய் பெருமா ளும், சுப்பிரமணியரும் கோவிலில் உள்ள திருக்கல் யாண மண்டபத்திற்கு சென் றனர். அங்கு மண்டபத்தில் எழுந்தருளி மீனாட்சி அம்ம னும், சுந்தரேஸ்வரரும்மணக் கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர்.
சுந்தரேஸ்வரரின் கையில் வைத்து பக்தர்க ளுக்கு காட்டினார்கள். பிறகு அந்த தாலியை அம்மன் கழுத்தில் அணிவித்தனர். அப்போது மங்கள ஒலி இசைக்கப்பட்டது. இந்த காட்சியைக் கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் அம்மனை வணங்கி வழிபட்டனர்.