தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தீர்த்தம் எடுக்க சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் 13 பக்தர்கள் காயம்.
தாராபுரம் அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட் பட்ட வரப்பாளையம் பகுதியில் இருந்து, பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதற்கு முன்பு பக்தர்கள் அமராவதி ஆற்றுக்கு சென்று தீர்த் தம் எடுப்பார்கள்.
அதன்படி நேற்று வரப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்ல முத்து (வயது 68), பாலசுப்பிரமணி (55), மகாலிங்கம் (50), சரவணன் (45), தினேஷ் (32),ஜீவானந்தம் (28), பிரகதீஷ் (23) கவுதம் (17) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுக்க சென்றனர்.
அப்போது ஆற்றில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த தேனீக்கள் பறந்து வந்து 13 பக்தர்களையும் விரட்டி விரட்டி கொட்டியது. இதில் காயம் அடைந்தவர்கள், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடுகளுக்கு திரும்பினர். மேலும் இச்சம் பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
தீர்த்தம் எடுக்க சென்றபோது, பக்தர்களை தேனீக்கள் கொட் டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமராவதி ஆற்றின் பாலத்தில் உள்ள தேனீக்களை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.