தர்மபுரியில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வான உயரத்தில் தர்மபுரி பேருந்து நிலையம் காந்திநகர் பாரதிபுரம் இலக்கியம்பட்டி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி சுற்றி வட்டமிட்டு பறந்ததால் அதன் சத்தம் கேட்டு பொதுமக்கள் சில நிமிடங்கள் அச்சத்தில் உறைந்தனர்.
திடீரென இந்த ஹெலிகாப்டர் தாழ்வான உயரத்தில் பறந்ததால் ஹெலிகாப்டரில் ஏதேனும் இயந்திர கோளாறு ஏற்பட்டு தரையிறங்க முயற்சி இருக்கிறதோ எனவும் திடீரென இது போல் பார்க்க வேண்டிய அவசியம் என்னவென்றால் குழப்பத்தில் பொது மக்கள் ஆழ்ந்தனர்.