தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

இதில் 30 கவுன்சிலருக்கு 18 பேர் மட்டும் கலந்து கொண்டனர் எதிர்க்கட்சித் தலைவர் சனாதானம் பற்றி சட்டசபையில் பேசியது சரியா என்று கேள்விக்கு சரி என்று விளக்கம் அளித்தார் நகராட்சி தலைவர் தமிழகத்தில் மூன்று மாதங்களாக தேர்தல் திருவிழா நடைபெற்றதால் நகராட்சியில் எந்த வித பணிகளுக்கும் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி தலைவர் அலுவலகம் நகர மன்ற கூட்டம் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவு பெற்று ஆட்சி அமைத்தபின் இன்று தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் பாபு கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

அங்கிருந்த கவுன்சிலர்கள் அதிகாரிகள் இடம் சாக்கடை சரி செய்யாமல் உள்ளது தெருவிளக்கு எரிவதில்லை குப்பைகள் எங்கு பார்த்தாலும் தேங்கி இருக்கிறது காலை ஓரங்களில் குப்பைகளுக்கு தீ வைப்பது என்று பல கேள்விகளுக்கு அதிகாரிகள் மௌனம் சாதித்து மெத்தன போக்கை தெரிவித்தனர்.

இதற்கு நகராட்சி தலைவர் இவ்வாறு நடந்து கொண்டால் ரோட்டில் இறங்கி நானே சாலை மறியல் செய்வேன் என்று அதிகாரிகளை எச்சரித்தார் தாராபுரத்தில் அடிப்படை வசதிகள் புதிய சுடுகாடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் நகராட்சி மயான பகுதிகளை பராமரிப்பது உள்ளிட்ட 37க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதது.

அதன் பிறகு செய்தியாளர்களை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் சந்தித்தார் அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் திறன் பட செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்

அதற்கு நிருபர்கள் சனாதனம் பற்றி சட்டசபையில் பேசலாமா இந்துக்கள் வெறுப்படைந்துள்ளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது இது குறித்து ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு நாங்கள் எப்பொழுதும் சனாதானத்தை பற்றியே பேசுவோம் அதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் என்றும் நாங்கள் சனாதனம் பற்றி முழுமையாக எப்பொழுதும் மக்களுக்காக பேசி வருகிறோம் மேலும் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் 24 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை கட்டி செயல்படாமல் இருக்கிறது தேர்தல் சமயத்தில் உடனே அதை திறந்து வைத்ததால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்ற கேள்விக்கு நாங்கள் அனைத்தும் செய்து விட்டோம் அதற்கான உபகரணங்கள் மட்டும் இல்லாமல் உள்ளது

இப்ப வரும் அரசு அதை பார்த்துக் கொள்ளட்டும் என்று தெரிவிக்கிறார் மற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக வேண்டும் என்று தமிழகம் முதல்வருக்கு கோரிக்கை விட்டார் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளில் அனைத்து வேலையிலும் திறம்பட செய்து வருகிறோம் தொடர்ந்து எங்களுக்கு புதிய அரசு ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் மேலும் தாராபுரம் மக்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது தண்ணீர் இல்லாத காரணத்தால் உடனே புதிய அரசு அமராவதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீரைத் திறந்து விட்டால் மட்டுமே குடிநீர் பஞ்சத்தை போக்க முடியும் உடன் கவுன்சிலர்கள் இருந்தனர் திமுக முன்னாள் முதல்வர் மு. க.ஸ்டாலின் புகைப்படம் இல்லாமல் நடந்த முதல் கூட்டம் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *